மேலும்

நாள்: 6th April 2016

சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா பிரதமர்

மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மேலும் ஒரு இராஜாங்க அமைச்சர், இரு பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக இரண்டு பிரதி அமைச்சர்களும், ஒரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றனர்.

பனாமா ஆவணங்களில் சிறிலங்கா அரசியல்வாதிகள் மூவர் – மகிந்த குடும்பத்தினரா?

உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள- பனாமா ஆவணங்களில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கை அதிகாரத்துவ, மேலாதிக்க மனப்பாங்குடன் நடத்துகிறது சிறிலங்கா – விக்னேஸ்வரன் செவ்வி

சிறிலங்கா அரசாங்கம்,  வடக்கு மாகாணத்தை  ‘அதிகாரத்துவ, மேலாதிக்க, அராஜக’ மனப்பாங்குடன் நடத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் குற்றம்சாட்டியுள்ளார்.

துறைமுக நகரத் திட்டம்: 70 நிபந்தனைகளுக்கு சீன நிறுவனம் இணக்கம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக கடலோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தினால், பரிந்துரைக்கப்பட்ட 70 நிபந்தனைகளுக்கு, அந்த திட்டத்தைச் செயற்படுத்தும், சீன நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது ஏன்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த சிறிலங்கா இராணுவத்தினர், அந்தப் பணியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவரது பாதுகாப்பு சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீனா அமைக்கும் துறைமுக நகருக்கு சிறப்பு மாவட்ட நிலை, தனிச்சட்டங்கள் – என்கிறார் ரணில்

சீனாவுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை விரிவாக்கிக் கொள்ளவதற்கு சிறிலங்கா எதிர்பார்த்திருப்பதாகவும், சிறிலங்காவில் முதலீடு செய்வதற்காக இன்னும் அதிகளவு சீன முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படைக்கு நாமல் செலுத்திய 50 மில்லியன் ரூபா குறித்து விசாரணை

உள்நாட்டுப் பயணங்களுக்கு விமானங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாக, 50 மில்லியன் ரூபாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா சிறிலங்கா விமானப்படைக்குச் செலுத்தியது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

சிறிலங்கா பிரதமருக்கு செங்கம்பளம் விரிக்கத் தயாராகும் சீனா- 10 உடன்பாடுகள் கையெழுத்தாகும்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்கான மூன்று நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் போது குறைந்தபட்சம் 10 இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.