மேலும்

நாள்: 23rd April 2016

மணலாறு பிரதேசத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மணலாறு பிரதேசத்தில், சிங்களக் குடியேற்றங்களை சிறிலங்காவின் புதிய அரசாங்கம், தீவிரப்படுத்தியிருக்கிறது.

சிறிலங்காவில் அமெரிக்க கடற்படையின் சிறப்பு நடவடிக்கைத் தளபதி

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், சிறப்பு நடவடிக்கைக் கட்டளைப் பணியகத்தின் தளபதி, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் ஆர்வத்தை ஏற்படுத்தாத தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

பூகோள அமைவிட ரீதியாக தமிழ்நாடு, சிறிலங்காவிற்கு மிகவும் அருகிலுள்ள மாநிலமாகும். இதற்கப்பால், வரலாற்று ரீதியாக நோக்கில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலானது சிறிலங்கா வாழ் மக்களை நாட்டமுறச் செய்திருக்க வேண்டும்.

பாரிஸ் உடன்பாட்டில் சிறிலங்கா உள்ளிட்ட 175 நாடுகள் கைச்சாத்து

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில் சிறிலங்கா உள்ளிட்ட 175 நாடுகள் நேற்று கையெழுத்திட்டன. புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்துலக உடன்பாடு நேற்று நியூயோர்க்கில் கையெழுத்திடப்பட்டது.

இந்தியாவைச் சமாளித்த ஜே.ஆர், சீனாவைச் சமாளிக்கும் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்தியா தானாகவே உருவாக்கிய போர் என்கின்ற பொறியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது போன்றே, சீனாவும் தன்னால் உருவாக்கப்பட்ட கடன் பொறிக்குள்ளிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதில் விருப்பங் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியே.

இன்று தாய்லாந்து செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தன், விக்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி,சிங்கள அடிப்படைவாத அமைப்புகளான, பொது பலசேனாவும், சிஹல ராவயவும், நேற்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன.

வட, கிழக்கிற்கு சமஸ்டி கோரும் தீர்வு யோசனைக்கு வடமாகாணசபை அங்கீகாரம்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி ஆட்சிமுறையை உள்ளடக்கியதான, அரசியலமைப்புத் திருத்த யோசனையை வடக்கு மாகாணசபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாடு சீரழிந்து போகும் – வடமாகாண முதல்வர்

நாட்டைப் பிரிக்காது, நாம் தனித்து வாழும் அதே நேரம், சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். இந்தச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போகும். சின்னாபின்னமாகி விடும். என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.