மேலும்

நாள்: 9th April 2016

இனி எந்த அரசியல்வாதிக்கும் இராணுவப் பாதுகாப்பு கிடையாது – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அவமானப்படுத்துவதற்காகவோ அல்லது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்காகவோ, அவருக்கான இராணுவப் பாதுகாப்பு விலக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது- சிறிலங்கா பிரதமர்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவினதோ அல்லது அயல்நாடுகளினதோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாக அமையாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின், மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

இனப்பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்படாவிட்டால்,  மீண்டும் நாட்டை பிரிக்க தனிஈழம் கேட்கும், ஆயுதக் கிளர்ச்சிகள் தலைதூக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. இத்தற்கொலை அங்கி சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ கண்டெடுக்கப்படவில்லை.

ரணில் நாடு திரும்பியதும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் குறித்து இறுதி முடிவு

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கடன்களைப் பெறுவது பேச்சுக்களில், சிறிலங்கா பிரதமர் சீனாவில் இருந்து நாடு திரும்பியதும், இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜி-7 மாநாட்டு பாதுகாப்பு- ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு சிறிலங்காவுடன் ஆலோசனை

ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அகிரா சுகியாமா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை இவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பிரகீத் கடத்தல் வழக்கு- கையொப்பத்தை மாற்றி இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தப்பிக்க முயற்சி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தமது கையொப்பங்களை மாற்றியிருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் திட்டங்களை விரைவுபடுத்த மூவர் அணியை நியமித்தார் ரணில்

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகளையும் திட்டங்களையும் விரைவுபடுத்துவதற்காக உயர்மட்ட மூவர் அணியொன்றை நியமித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவுக்கான உதவிகள் தனிநபர்களையோ கட்சிகளையோ சார்ந்ததாக இருக்காது – சீன அதிபர்

சிறிலங்காவுக்கான சீனாவின் உதவிகள், கொள்கைகளின் அடிப்படையிலும், சிறிலங்கா மக்களின் நலன் அடிப்படையிலுமே இருக்குமே தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களைச் சார்ந்ததாக இருக்காது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.