மேலும்

நாள்: 19th April 2016

ஆழ்கடல் கண்காணிப்பு – வெளிநாடுகளின் உதவியுடன் கடற்படையை பலப்படுத்துகிறது சிறிலங்கா

மாலைதீவுக்கும், மலாக்கா நீரிணைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை பாதுகாப்பான கடற்பாதையாக மாற்றும், சிறிலங்கா கடற்படையின் சிறப்புத் திட்டத்தை செயற்படுத்த பல்வேறு நாடுகளின் உதவியை சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்ளவுள்ளது.

சிறிலங்கா மீதான தடையை நீக்குமா ஐரோப்பிய ஒன்றியம்? – நாளை மறுநாள் முடிவு

சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதித் தடையை நீக்குவது குறித்து தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் நாளை மறுநாள் நடக்கவுள்ளது.

பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள்

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

வெளிநாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள்

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடனான உறவகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அமைச்சரின் கையில் சிறிலங்கா காவல்துறை திணைக்களம்

சிறிலங்காவில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில், காவல்துறைத் திணைக்களம் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர், படைத்தளபதிகளுடன் சிறிலங்கா அதிபர் இன்று அவசர சந்திப்பு

சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் மற்றும், பாதுகாப்புத் துறைகளின் தளபதிகளுக்கான சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதில் சிறிலங்கா, எகிப்து ஆர்வம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதில், சிறிலங்காவும், எகிப்தும் ஆர்வம்காட்டி வருவதாக, பிரிஐ செய்தி நிறுவனம், தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் அமெரிக்கப் பயணம் திடீரென ரத்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.