மேலும்

நாள்: 4th April 2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கை

வரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமாறு,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது.

அனைத்துலக கப்பல் பாதைகளைப் பாதுகாக்கும் பணியில் இறங்குகிறது சிறிலங்கா கடற்படை

அனைத்துலக கடற்பரப்பில் நாடுகடந்த வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான கப்பல்கள், விமானங்கள் மற்றும் கருவிகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கூட்டுப்படைகளின் தளபதி புதுடெல்லியில் – உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சென்றார்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் தவறிழைக்கும் அமெரிக்கா – அனைத்துலக ஊடகம்

அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட அண்மைய இராஜதந்திரச் செயற்பாடுகள், சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் போருக்குப் பின்னான சமூகத்தின் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் இழுபறி – 125 மில்லியன் டொலர் இழப்பீடு கோருகிறது சீனா

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் தாமதித்ததால், பெருந்தொகை இழப்பீட்டை தருமாறும் அல்லாவிட்டால், மேலதிக நிலப்பரப்பை உருவாக்க அனுமதிக்குமாறும் சீன நிறுவனம் கோரியிருக்கிறது.

ரணிலின் பயணத்தின் மூலம் சீனாவுடனான உறவு புதிய உச்சத்தைத் தொடும் – சிறிலங்கா எதிர்பார்ப்பு

சீனாவுடன்  நடத்தப்படவுள்ள இருதரப்பு பேச்சுக்கள் மூலம். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

வெடிபொருட்கள் தொடர்பாக எதையும் மறைக்கவில்லை – என்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டது தொடர்பாக எதையும் அரசாங்கம் மறைக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு மகிந்த விடுத்துள்ள சவால்

வடக்கு,கிழக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர்,  குறைந்தபட்சம் கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குச் சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தினேஸ், வீரவன்சவை மாட்டி விட்ட பீரிஸ் – வெடிபொருள் மீட்பு குறித்து அவர்களிடமும் விசாரணை

சாவகச்சேரியில் தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான, விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.