மேலும்

நாள்: 14th April 2016

மூன்று மாதங்களில் 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம் கோரி விண்ணப்பம்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரி, 146 இலங்கையர்கள் விண்ணப்பித்திருப்பதாக  அந்த நாட்டின் குடியேற்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், நீதியை அமெரிக்கா ஊக்குவிக்கும்- ரொம் மாலினோவ்ஸ்கி

சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் நீதியை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்காக உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய – சிறிலங்கா கடற்படைகள் அடுத்த மாதம் கூட்டுப் பயிற்சி

ஜப்பானிய கடற்படையும், சிறிலங்கா கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையும் இணைந்து, கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.

பாராட்டுகளுக்கு மத்தியில் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ள அமெரிக்கா

போரின் போதும், போருக்குப் பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை சிறிலங்காவில் தொடர்வதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் சிறிலங்காவில் நடந்தது போலவே நிகழும் – ஜோன் கெரி

மக்களின் அடிப்படை உரிமைகள், கௌரவம், சுதந்திரம் என்பன மறுக்கப்படும் போது, என்ன நிகழும் என்பதை, சிறிலங்காவில் காண முடிந்தது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

அதிகளவில் பாகிஸ்தான் மரக்கறிகளை சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து மரக்கறிகளை அதிகளவில் இறக்குமதி செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்காவின் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.

சவால்களை எதிர்கொள்ள சிறிலங்காவுக்கு உதவுகிறோம்- அமெரிக்க இராஜாங்கச் செயலர்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் சவால்கள் உள்ள போதிலும், ஜனநாயகத்தின் முக்கியமான வெற்றிகளை அங்கு காண முடிகிறது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜொன் கெரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடினார் மைத்திரி

சிங்கள-தமிழ்ப் புத்தாண்டை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கொழும்பு -7இல் அமைந்துள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடினார்.