மேலும்

நாள்: 20th April 2016

உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில் சிறிலங்கா 141ஆவது இடத்தில்

உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா இந்த ஆண்டு, 141ஆவது இடத்தில் உள்ளது. ஆர்எஸ்எவ் எனப்படும், எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால்,  2016ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமனம்

சிறிலங்காவின் 34 ஆவது காவல்துறை மா அதிபராக, பூஜித ஜெயசுந்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

மகிந்தவுக்கு கல்லீரல் பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை, இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.

பாதாள உலகக் குழுவில் சாள்ஸ் அன்ரனி படையணியின் முன்னாள் போராளி?

கொழும்பில் பாதாள உலகக் குழுவுடன் இணைந்து செயற்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகப் பதிவேடுகளை சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

மின்னேரியா இராணுவ முகாமின் எரிபொருள் விநியோகம் தொடர்பான பதிவேடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஹோமகம பதில் நீதிவான், உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறது ஈபிடிபி- டக்ளசுக்கு அமைச்சர் பதவி?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி குழுவினருக்கும் இடையில், அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

தெற்காசியாவின் உயரமான புத்தர் சிலை சிறிலங்காவில் – திறந்து வைக்கிறார் மைத்திரி

தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை, மத்துகமவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும், ஏப்ரல் 23ஆம் நாள்- சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தயாரிக்க சிறிலங்காவுக்கு ஐ,நாவும் உதவி

அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்பவும், ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு அமைவாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, விரிவான தீவிரவாத முறியடிப்பு சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு, சிறிலங்காவுக்கு உதவுவதாக ஐ.நாவின் தீவிரவாத முறியடிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணியகம் வாக்குறுதி அளித்துள்ளது.