மேலும்

நாள்: 2nd April 2016

ஐ.நா அதிகாரிகளுடன் போர்க்குற்ற விவகார அமெரிக்க நிபுணர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், இன்று கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இப்போதைக்கு இல்லை பான் கீ மூனின் சிறிலங்கா பயணம்

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விக்னேஸ்வரனைச் சந்தித்தார் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க நிபுணர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

‘ஈழம்’, ‘விடுதலை’யை கைவிடுகிறது பத்மநாபா ஈபிஆர்எல்எவ் – புதிய பெயருக்குள் நுழைகிறது

பத்மநாபா ஈபிஆர்எல்எவ், தமது கட்சியின் பெயரில் உள்ள ‘ஈழம்’, ‘விடுதலை’ ஆகிய சொற்களை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இதுதொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

தற்கொலைத் தாக்குதல் அங்கி 5 ஆண்டுகளுக்கு முந்தியது- விசாரணையில் கண்டுபிடிப்பு

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி, சுமார் ஐந்து ஆண்டுகள் பழைமையானது என்று, தீவிரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழர்களின் கையில் தான் சிங்களவர்களின் நிம்மதி – சிறிலங்கா அதிபர்

தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் பீரிஸ்- இன்று விசாரணைக்கு அழைப்பு

சாவகச்சேரியில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்க கட்டளைக் கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது

ஆறுநாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க கடற்படையின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் நேற்றுமுன்தினம் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.