மேலும்

நாள்: 30th April 2016

அடுத்து வரப்போகிறது லா-நினா – கடும் குளிர், வெள்ளப்பெருக்கு ஆபத்து

பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட, எல் நினோ எனப்படும் வெப்ப சலனத்தின் தாக்கத்தினால், பெரும்பாலான ஆசிய நாடுகள் கடும் வெப்பம், மற்றும் வரட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் லா –நினா என்ற குளிர் சலனத்தின் பிடியில் சிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் பிரெஞ்சு போர்க்கப்பல் – புதிய உறவுகள் துளிர்க்கின்றன

சிறிலங்காவுடன் உறுதியான கடற்படை கூட்டு ஆரம்பிக்கப்படுவதற்கான தருணம் இதுவேயாகும் என்று, பிரெஞ்சுக் கடற்படை தெரிவித்துள்ளது.

சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்னமும் நிறைவேற்றப்படாத சிறிலங்காவின் கடப்பாடுகள் உள்ளன – சமந்தா பவர்

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், மற்றும் நிலையான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதுவர் சமந்தா பவர்.

சிவராம் படுகொலையாகி 11 ஆண்டுகள் – கொழும்பில் ஆர்ப்பாட்டம், யாழ்ப்பாணத்தில் நினைவு நிகழ்வு

மூத்த ஊடகவியலாளர் டி.சிவராம் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு நீதி வழங்கக் கோரி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.