மேலும்

நாள்: 24th April 2016

மீண்டும் கூட்டுப் பயிற்சிக்குத் தயாராகும் சிறிலங்கா- அமெரிக்க கடற்படைக் கொமாண்டோக்கள்

சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவுக்கும், அமெரிக்க கடற்படையின் சீல் படைப்பிரிவுகளுக்கும் இடையில், கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பேச்சுக்களை நடத்தவே, அமெரிக்க கடற்படையின் பசுபிக் சிறப்பு நடவடிக்கைத் தளபதி சிறிலங்கா வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிடம் இருந்து கோத்தாவைப் பாதுகாக்கும் சிறிலங்கா அரசு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு அமெரிக்காவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, சிறிலங்கா அரசாங்கம் ஆதரவளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் புலனாய்வுத் தகவல்களைப் பகிரும் நாடுகள் – ருவான் விஜேவர்த்தன தகவல்

மலேசிய உள்ளிட்ட பல நாடுகள், சிறிலங்காவுடன் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன.

ரணிலுக்கு இந்தியா அழைப்பு – அடுத்தமாதம் புதுடெல்லி செல்கிறார்

புதுடெல்லியின் அழைப்பின் பேரில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தமாத இறுதியில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடக்கில் நீர்நிலைகளில் வெடிபொருட்களை அகற்ற ரோபோக்களுடன் வருகிறது அமெரிக்க கடற்படை

வடக்கில் குளங்கள், கடலேரிகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வெடிபொருட்களை அகற்றும் பணியில், சிறிலங்கா கடற்படையுடன் அமெரிக்கக் கடற்படையும் ஈடுபடவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீன- சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாடு – விரைவில் மூன்றாவது கட்டப் பேச்சு

சுதந்திர வர்த்தக உடன்பாடு பற்றிய வரைவு, விரைவில் நடக்கவுள்ள, சீன- சிறிலங்கா அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுக்களின் போது இறுதி செய்யப்படும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி சியான்லியாங் தெரிவித்துள்ளார்.

மீன் ஏற்றுமதித் தடை நீக்கம் – அவசரப்பட்டு அறிவித்த சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விசனம்

சிறிலங்கா மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் அவசரப்பட்டு அறிவிப்பை வெளியிட்டது குறித்து, ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்கா அரசாங்கத்திடம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இரகசிய வங்கிக்கணக்குகள் குறித்த விசாரணைக்கு இந்தியா, அமெரிக்காவிடம் உதவி

வெளிநாடுகளில் இலங்கையர்கள் வைத்திருக்கும் இரகசிய வங்கிக்கணக்குகள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி – ஜெயலலிதா குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கபட நாடகம் ஆடி, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச்செயலரும், தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.