மகிந்தவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டதா? – மக்களைக் குழப்பும் அரசாங்கமும் எதிர்க்கட்சியும்
தமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அளுத்கம விகாரையில் நேற்று வழிபாடுகளை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.