மேலும்

நாள்: 18th April 2016

மேதினப் பேரணி – மகிந்த குறித்து மைத்திரி இறுதி முடிவு

காலியில் நடக்கவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினப் பேரணியில், பங்கேற்காத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

அனைத்துலக கப்பல் பாதையை பாதுகாக்கும் பொறுப்பு சிறிலங்கா கடற்படையிடம்

மாலைதீவில் இருந்து மலாக்கா நீரிணை வரையான கடல் பகுதியில், பயணம் செய்யும் கப்பல்களின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்றாராம் கோத்தா

மருத்துவ சிகிச்சைக்காக தாம் வெளிநாடு சென்றிருப்பதால், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக இன்று முன்னிலையாக முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர

சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்படவுள்ளார். அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் இவரை பெயரை சிறிலங்கா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் இருந்த 194 பேருக்கு காணி உரிமைப் பத்திரங்கள்

சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாமில் இருந்த 194 குடும்பங்களுக்கு, நாளை தற்காலிக காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

மகிந்தவும், கோத்தாவுமே புலிகளின் இலக்காம்- தயான் ஜெயதிலக கண்டுபிடிப்பு

மகிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவுமே புலிகளின் இலக்காக இருப்பர் என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியும், மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர்களில் ஒருவருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

பொருத்து வீடுகளைப் பெற வடக்கு மக்கள் முண்டியடிக்கிறார்களாம் – சுவாமிநாதன் கூறுகிறார்

கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாதிரி பொருத்து வீடுகள் போன்ற, வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு வடக்கிலுள்ள மக்கள் முண்டியடிப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

தமிழ்மக்கள் மீது எந்தத் தீர்வையும் திணிக்கமாட்டோம் – இரா.சம்பந்தன்

எமது மக்கள் மீது எந்தவொரு தீர்வையும் திணிக்கமாட்டோம், அவர்கள் விரும்பாத எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.