மேலும்

நாள்: 26th April 2016

வி்டுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது

சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் – உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாம்

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய உடன்பாடுகளைச் செய்திருப்பதாக,  முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இராணுவத்துக்கு முக்கிய பங்கு உண்டு – பிரித்தானியா

நீண்டகாலப் பிரச்சினைகளாக உள்ள  நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில், நாட்டின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில், சிறிலங்கா இராணுவத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

கடலை மாசுபடுத்தும் நாடுகளில் சிறிலங்காவுக்கு ஐந்தாவது இடம்

உலகில் கடலை மோசமாக மாசுபடுத்தும்  நாடுகளில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. இன்ரநசனல் பிஸ்னஸ் ரைம்ஸ் இதழினால், மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்விலேயே, சிறிலங்காவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கடல்சார் அனர்த்த அவதானிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்கிறது சீனா

சிறிலங்காவில் கடல்சார் அனர்த்த அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு சீனா உதவி வழங்கவுள்ளது.  மீனவர்கள் கடல் அனர்த்தங்களில் சிக்கிக் கொள்வதைத் தடுக்கவே இந்த அவதானிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

சமஸ்டியை நிராகரித்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – அதுபற்றி பேச்சு நடத்தப்படாதாம்

சமஸ்டி ஆட்சிமுறைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது, அதுபற்றிப் பேச்சுக்களையும் நடத்தாது என்று, சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையைக் கலைக்க வேண்டும் – உதய கம்மன்பில போர்க்கொடி

வடக்கு மாகாணசபையைக் கலைத்து விட்டு, அதன் நிர்வாகத்தைக் கையில் எடுக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

மைத்திரிக்கும் இந்தியா வருமாறு அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை புதுடெல்லி வருமாறு, இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மெதிரிகிரியவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே, தமக்கு மீண்டும் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதான தகவலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.

கிளிநொச்சியில் வைத்தே புலிகளின் முன்னாள் தளபதி ராமிடம் விசாரணை

திருக்கோவில்- தம்பிலுவில் பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், கிளிநொச்சியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் இருவர் வெள்ளியன்று சிறிலங்கா வருகின்றனர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் இம்மாத இறுதியில், சி்றிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.