மேலும்

நாள்: 13th April 2016

சிறிலங்காவின் கடந்த ஆண்டு சாதனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கும் – ஜோன் கெரி

சிறிலங்காவில் கடந்த ஆண்டின் சாதனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரப் பணிகள் அடுத்த மாதம் மீள ஆரம்பம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய கொள்கைகள் மற்றும், பொருளாதார விவகார அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தினால் மூன்றாம் தரப்பினரே நன்மையடைவார்கள் – மாவை சேனாதிராஜா

இந்த நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதில் சில அரசியற் சக்திகள் தீவிரமாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, ‘த சண்டே லீடர்’ வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ஜாதிக ஹெல உறுமய

அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்படும் வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக, நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதாக, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணசபையின் அரசியல் தீர்வு பிரேரணை ஒத்திவைப்பு

அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, வரும் 18ஆம் நாளுக்கு வடக்கு மாகாணசபை ஒத்திவைத்துள்ளது.

வடக்கில் சிறிலங்கா படையினர் புதிதாக காணிகளை சுவீகரிக்கவில்லையாம்

வடக்கில் சிறிலங்கா படையினரால் புதிதாக எந்த காணிகளும் சுவீகரிக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் புதிய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடத் தடை

முல்லைத்தீவு கடலில் ஏற்கனவே மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மட்டுமே, அங்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சின் பேச்சாளர் வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் இன்றும் இராணுவ ஆட்சி – சிறிலங்கா அதிபர், பிரதமரிடம் முறையிடவுள்ளார் விக்னேஸ்வரன்

வடக்கில் இடம்பெற்று வரும் இராணுவத்தினரின் காணி அபகரிப்புகள் மற்றும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து, முறையிடுவதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம் – ஒன்பது பேர் இதுவரை கைது

சாவகச்சேரி, மறவன்புலவில் கடந்த மாத இறுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை, ஒன்பது பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் திட்டம் – தமக்குத் தெரியாது என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இதுவரையில் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படாத நிலையில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாலம் அமைப்பது குறித்து தகவல்களை தெரிவிப்பது அர்த்தமற்றது என்று சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.