மேலும்

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது ஏன்?

mahinda-psdசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த சிறிலங்கா இராணுவத்தினர், அந்தப் பணியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவரது பாதுகாப்பு சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்குப் பாதுகாப்பு அளித்து வந்த 50இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து நீங்குமாறு சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்திருந்தது.

அதற்குப் பதிலாக, சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மோசமான தீவிரவாதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த, சிறிலங்காவின் ஒரே தலைவரான மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பை நீக்கியதை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு நியாயப்படுத்தும்? என்று அவர் ருவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து, கருத்து எதையும் வெளியிட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எனினும், எல்லா முக்கிய பிரமுகர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பை நீக்கி விட்டு, காவல்துறையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இதனால் பாதுகாப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *