சிறிலங்கா- சீனா இடையே ஏழு உடன்பாடுகள் கைச்சாத்து
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நேற்று ஏழு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நேற்று ஏழு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
முக்கிய பிரமுகர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்படுவது சட்டவிரோதம் என்றும், மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.
இனிவரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபி கட்சியும் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன.
திமுகவுடன் கூட்டணி இல்லை, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து செயல்படுவது என்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவுகள், திமுக தலைமையை மட்டுமல்ல; அடிமட்டத் தொண்டர்கள்வரை நிலைகுலையச் செய்துவிட்டிருக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.
சீன அபிவிருத்தி வங்கியின் பணியகம் ஒன்று விரைவில் கொழும்பில் திறக்கப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர், ஹு ஹுவாய்பாங்கிற்கும் இடையில் நேற்று பீஜிங்கில் நடந்த சந்திப்பிலேயே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சீனப் பிரதமர் லி கெகியாங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ரொட் புச்வால்ட் மற்றும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பசில் ராஜபக்சவின் மகனின் வீட்டில் சமையல் வேலைகளை செய்வதற்காக சிறிலங்கா கடற்படையினர் இருவர், இராஜதந்திரக் கடவுச்சீட்டில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் உள்ளடங்கியிருந்த சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்து, மிகவும் பழைமையானது என்றும், அது வெடிக்கும் திறனை இழந்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை எந்த நிறுவனத்திடம் கையளிப்பது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.