சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா பிரதமர்
மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம் பீஜிங் புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா பிரதமரின் தலைமையிலான குழுவில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றிருந்தனர்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக சீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா பிரதமர் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஏப்ரல் 10ஆம் நாள் இரவு கொழும்பு திரும்புவார்.