மேலும்

பெர்லின் செல்லும் சிறிலங்கா அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை

maithri-mobileஅடுத்தமாதம் ஜேர்மனியின் பெர்லின் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பெப்ரவரி 23ஆம் நாள் ஜேர்மனிக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு பெர்லின் செல்லவுள்ளார். அங்கிருந்து அவர் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணங்களின் போது சிறிலங்கா அதிபருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க நெறிமுறை தலைமை அதிகாரி ரிஸ்வி ஹசன் தலைமையிலான ஏழு முன்னேற்பாட்டு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் பெர்லின் சென்றுள்ளனர்.

இவர்கள், அரச பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, அங்குள்ள தூதுவர் கருணாதிலக அமுனுகமவின் இல்லத்தில் தங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னொருபோதும் இல்லாதளவுக்கு சிறிலங்கா அதிபருக்கு பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச கூட பெரியளவிலான பாதுகாப்பு ஒழுங்குகளின்றியே பயணங்களை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *