மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

திங்களன்று சென்னை – யாழ். விமான சேவை – பயண நேரம், கட்டணங்கள் அறிவிப்பு

சென்னை- யாழ்ப்பாணம் இடையே, வாரத்தில் மூன்று நாட்களுக்கு, அலையன்ஸ் எயர் நிறுவனம் விமான சேவைகளை வரும் 11ஆம் நாள் ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அலையன்ஸ் எயர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை பெருமைமிக்க தருணம்  – எயர் இந்தியா தலைவர்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என்று எயர் இந்தியா நிறுவத்தின் தலைவரும், எயர் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார்.

சோதிட ஆலோசனைப்படி கர்நாடக ஆலயங்களில் ரணில் சிறப்பு வழிபாடு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளிலும், யாகங்களை நடத்துவதிலும் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை  – நிபுணர் குழு

தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே, மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றும், கடலுக்கு அடியிலான இணைப்புகளின் மூலம் அதற்குச் சாத்தியம் இல்லை எனவும், தமிழ்நாட்டின் மின்சக்தி அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்

வேதாரணியம் பகுதியில் உள்ள தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட படகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு

தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டியது உண்மையே – என்.ராம்

தம்மைக் கொலை செய்ய ‘றோ’ சதித் திட்டம் தீட்டியதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூறியதாக தாம் வெளியிட்ட செய்தி உண்மையானதே என்று ‘தி ஹிந்து’ நாளிதழின், ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் சரணடையும் எண்ணம் கொண்டவரல்ல – இந்திய தொலைக்காட்சிக்கு மகிந்த செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் சரணடையும் எண்ணம் உள்ளவர் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏழு பேரின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் ஆளுனருக்குப் பரிந்துரை

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ஏழு பேரையையும் விடுதலை செய்வதற்கு மாநில ஆளுனருக்கு, தமிழ்நாடு அமைச்சரவை நேற்று பரிந்துரை செய்துள்ளது.

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது – சுப்ரமணியன் சுவாமி பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியாவின் அதி உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.