மேலும்

சிறிலங்காவின் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன காலமானார்

m-k-d-s-gunawardenaசிறிலங்காவின் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன சற்று முன்னர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

சிலமாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவர், லண்டனில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருந்த நிலையிலேயே இன்று பிற்பகல் மரணமானார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன , சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன எதிரணியின் வேட்பாளராக களமிறங்கிய போது, அவருடன் முதலில் இணைந்து கொண்டவர்களில் ஒருவராவார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவின் வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன , வெற்றி பெற்று காணி அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *