மேலும்

யாழ்.மாவட்ட மாணவர்களே பல்கலைக்கழக நுழைவுக்கு அதிகளவில் தகுதி

jaffna-university2015ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரத் தேர்வில், யாழ்.மாவட்ட மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியைப் பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 7,346 மாணவர்கள் க.பொ.த உயர்தரத் தேர்வில் தோற்றியிருந்தனர். இவர்களில் 4872 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர். இது 66.33 வீதமாகும்.

குறைந்தபட்சமாக, பொலன்னறுவ மாவட்டத்தில் இருந்து 56.76 வீதமான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இங்கிருந்து 3455 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றிய போதும், 1961 மாணவர்கள் மாத்திரம் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகைமை பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் மூன்று பாடங்களிலும், சித்திபெறத் தவறிய மாணவர்களின் எண்ணிக்கையில் கொழும்பு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கிருந்து தேர்வுக்குத் தோற்றிய 2071 மாணவர்கள் (7.99 வீதம்) மூன்று பாடங்களிலும் சித்திபெறவில்லை.

அடுத்து கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த, 1771 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் தேர்ச்சி பெறத் தவறியுள்ளனர்.

கணிதத்துறையில் முதலிடத்தை வடக்கு மாகாணம் பெற்றுள்ளது.  விஞ்ஞானத்துறையில் மேல்மாகாணமும், சப்ரகமுவ மாகாணம் வர்த்தகத்துறையிலும், ஊவா மாகாணம் கலைத்துறையிலும் முன்னணி பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாகவும் சிறிலங்காவின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *