மேலும்

இந்தியக் கடற்படையின் பாய்க்கப்பல்களும் கொழும்பு வந்தன – சீனாவுடன் போட்டி?

Indian Navy Sail Training Shipsசீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படையின் இரண்டு கடற்பயணப் பயிற்சிப் பாய்க்கப்பல்கள் இரண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

இந்தியக் கடற்படையின் கடற்பயணப் பயிற்சிக் கப்பல்களான, தரங்கினி மற்றும் சுதர்சினி ஆகியன, பயிற்சிப் பயணமாகவே நேற்று கொழும்புத துறைமுகம் வந்தன.

இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படை மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று வரை கொழும்புத் துறைமுகத்தில் இந்தக் கப்பல்கள் தரித்து நிற்கும். இதன்போது, இந்தியக் கப்பல்களில், சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

Indian Navy Sail Training Ships

கொழும்புத் துறைமுகத்துக்கு சீனப் போர்க்கப்பல்கள் அடிக்கடி வருகை தருவதை இந்தியா விரும்பாத நிலையில், சீனப் போர்க்கப்பல்களும், இந்தியக் கடற்படையின் பயிற்சிக்கப்பல்களும் ஒரே நேரத்தில் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கருத்து “இந்தியக் கடற்படையின் பாய்க்கப்பல்களும் கொழும்பு வந்தன – சீனாவுடன் போட்டி?”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    இன்றுதான் விடுதலை புலிகளின் பெருமை இந்தியாவுக்கு புரிந்து இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *