மேலும்

43 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா அதிபருக்கு ஜேர்மனி அழைப்பு

maithri-mobile43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரைத் தமது நாட்டுக்கு வருமாறு ஜேர்மனி அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பொலன்னறுவவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

”உள்நாட்டில் விமர்சனங்கள் இருந்தாலும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு முழு உலகத்தினதும் ஆதரவும், ஆசியும் உள்ளது.

43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரை தமது நாட்டுக்கு வருமாறு ஜேர்மனி அழைப்பு விடுத்தள்ளது. இந்த அழைப்பை ஏற்று அடுத்த மாதம் ஜேர்மனிக்கு அதிகாரபூர்வ பயணமாக செல்லவுள்ளேன்.

அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளுமாறு அபிவிருத்தி அடைந்த நாடுகளிடம் இருந்து இன்னும் பல அழைப்புகள் கிடைத்துள்ளன. நான் கேட்டுக் கொண்டற்கிணங்கள் இந்த அழைப்புகள் விடுக்கப்படவில்லை.

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு உதவுவதில், அனைத்துலக சமூகத்திடையே போட்டி ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *