மேலும்

யாழ். பொங்கல் விழாவுக்கு வருகிறார் பிரித்தானிய அமைச்சர்

HugoSwireயாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள தைப்பொங்கல் விழாவில் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் பங்கேற்பார் என்று கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ள ஹியூகோ ஸ்வைர், கொழும்பில் உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன், வரும் 15ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் பிரித்தானிய இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைரும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பொங்கல் விழா கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி இராஜராஸே்வரி அம்மன் ஆலயத்தில் சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் வழிபாடுகளுக்கும் அன்றைய நாள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி விட்டு இத்தகைய பொங்கல் கொண்டாட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் நடத்த வேண்டும் என்று, அகில இலங்கை இந்து மாமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 கருத்துகள் “யாழ். பொங்கல் விழாவுக்கு வருகிறார் பிரித்தானிய அமைச்சர்”

  1. Sivarajah Vathsala Kanagasabai
    Sivarajah Vathsala Kanagasabai says:

    எதுக்கடா எல்லோரும் படையெடுக்கிறீங்க? கொழும்பில் அப்பம்.ஈழத்தில் பொங்கல்.
    தமிழ் மக்கள் பேரவையை குலைக்கத்தானே?

  2. Mayurathas Nalliah
    Mayurathas Nalliah says:

    முழுப்பூசணிக்காய மூடி மறைத்து அங்கே எல்லாம் சுபம் என்று உலகுக்கு காட்ட வேண்டும். உங்களுக்கு எல்லாம் அழிவு காலம் ரொம்ப தூரம் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *