மேலும்

இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் – பரிசீலிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா

pambanஇராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தொடருந்து மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு வழியை உருவாக்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரையில் சிறிலங்காவிடம் அதிகாரபூர்வமான  தகவலைப் பரிமாறவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணை வழியாக இந்த இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் தொடர்பான சாத்திய ஆய்வை மேற்கொள்ளுமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இநதிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேராவிடம், கேள்வி எழுப்பியிருந்தது.

”இத்தகைய செய்திகள் வெளிவந்திருந்தாலும், இந்த திட்டம் தொடர்பாக சிறிலங்காவுக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக வெற்றி பெற்றால், இந்த திட்டத்தை இந்தியா அதிகாரபூர்வமாக முன்வைக்கும் போது, அதுகுறித்து எமது அரசாங்கம் பிரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்.

எவ்வாறாயினும். இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னதாக, இந்த திட்டத்தினால், இருநாடுகளிலும் சமூக, பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாதக, பாதக காரணிகள் குறித்து, கவனமாக ஆராயப்படும்.

இது ஒரு மிகப்பெரிய திட்டமாக இருக்கும் என்பதால், எந்தவொரு முடிவையும் எடுக்க முன்னர், முற்றுமுழுதாக ஆராயப்படும்.” என்றும் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *