மேலும்

கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்தி கிட்டும்; ஆனால் பதவிக்காக பல்இழிக்கமாட்டார்கள் – பசீர் சேகுதாவூத்

basheer-segudawoodஇந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்கும். ஆனால் அது பதவிக்காக பல் இழிக்கும் கட்சி அல்ல. இனத்தின் விடுதலை, இனத்திற்கு, இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தரும் உடன்பாட்டோடு தான் அவர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத். ஏறாவூரில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

“இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்தி கிடைக்கப் போகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்.

அது மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமாக இருந்தால் கூட்டமைப்புடன் பேசமாட்டாது.

ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு வழங்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் அமைச்சராக வரப்போகிறோம் என்று சொல்லுகிற கட்சி அல்ல. பதவிக்காக பல்லு இழிக்கிற கட்சி அல்ல.

60 ஆண்டு காலத்திற்கும் அதிகமாக தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றே இலக்கு என்று செயற்படுகிற கட்சி.

எந்த ஒரு தருணத்திலும் அமைச்சுப் பதவிகளை பெறவேண்டும் என்ற இலக்கோடு செயற்பட்ட கட்சி அல்ல.

இனிமேலும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு, சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கப் போகிறோம் என்று எந்தக் காலத்திலும் சொல்லப் போவதில்லை.

தங்களுடைய இனத்தின் விடுதலை, இனத்திற்கு, இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தரும் உடன்பாட்டோடு தான் அவர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள்.

அது தமிழீழம் அல்ல, ஆனால் நியாயமான, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய, வெளி உலகத்தில் வாழுகிற, சிறுபான்மைத் தமிழ் மக்கள், அனைத்துலக ரீதியாக வாழுகிறவர்கள், ஏற்றுக் கொள்கிற, அவர்களும் வந்து சிறிலங்காவில் சிறுபான்மை மக்களின் பங்காளர்களாக, சிறிலங்காவின் பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழுகிற, சரியான அடிப்படையில் தான், அவர்கள் உடன்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *