மேலும்

மாதம்: August 2015

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பம் – கொழும்பு வந்தார் ஹமீத் கர்சாய்

சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று பிற்பகல் கொழும்பு வந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிப்பது சபாநாயகர் தான் – லக்ஸ்மன் கிரியெல்ல

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருப்பதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை உருவாக்க மகிந்த ஆதரவு அணி முயற்சி – உடைக்க முனைகிறார் மைத்திரி?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் தலையிடேன் – பங்காளிக் கட்சிகளிடம் மைத்திரி உறுதி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

விசுவாசிகளாலேயே தோற்கடிக்கப்பட்ட மகிந்த – நடந்தது என்ன? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மகிந்தவின் விசுவாசிகளே மகிந்தவின் தேர்தல் தோல்விக்குக் காரணம். தேர்தல் பரப்புரைக்கு தலைமை தாங்குவதற்கு மைத்திரியை மகிந்த அனுமதித்திருந்தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும். மகிந்தவின் விசுவாசிகள் மகிந்தவை மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தோற்கடித்துள்ளனர்.

ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே அதிகாரபூர்வ முடிவு – இரா.சம்பந்தன்

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைக்க சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதான அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக, ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே, அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய அதிபர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மூவர் கைதாகின்றனர்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ள, சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்படவுள்ளனர்.

நோர்வேயில் “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி” நூல் அறிமுகமும் சமகாலஅரசியல் விவாதக் களமும்

நோர்வே ‘தமிழ் 3’ வானொலியின் ஏற்பாட்டில், “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி”  என்ற  நூலின் அறிமுகஅரங்கும்; இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் பின் தமிழர் அரசியல் சார்ந்த விவாதக்களமும்  இடம்பெறவிருக்கிறது.

விசாரணையைத் தவிர்க்க அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றாரா சுசில் பிரேமஜெயந்த?

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த திடீரென அமெரிக்காவுக்குச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்ரெம்பர் 17இல் முதலாவது முறைசாரா கூட்டத்தை ஜெனீவாவில் கூட்டுகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்றை முன்வைப்பது தொடர்பான முதலாவது முறைசாரா கூட்டத்தை அமெரிக்கா வரும் செப்ரெம்பர் 17ஆம் நாள் ஜெனீவாவில் நடத்தவுள்ளது.