மேலும்

நோர்வேயில் “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி” நூல் அறிமுகமும் சமகாலஅரசியல் விவாதக் களமும்

ki-pi-kanavin-meethi-bookநோர்வே ‘தமிழ் 3’ வானொலியின் ஏற்பாட்டில், “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி”  என்ற  நூலின் அறிமுகஅரங்கும்; இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் பின் தமிழர் அரசியல் சார்ந்த விவாதக்களமும்  இடம்பெறவிருக்கிறது.

வரும் செப்ரெம்பர் 6 ஆம் நாள்,ஞாயிற்றுக்கிழமை  மாலை 5 மணிக்கு ஒஸ்லோவின்  Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsråd Mathiesens vei 27,  0594 Oslo), இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தநூல், ஈழப் போராட்ட முன்னோடி-கவிஞர்-எழுத்தாளர் கி.பி. அரவிந்தன் மறைவை ஒட்டி அவரோடு பழகிய, பணிபரிந்த, அவரையறிந்த எழுத்தாளுமைகள், தோழர்கள், கல்வியாளர்கள், இலக்கிய கர்த்தாக்கள், ஊடகவியலாளர்களின் கட்டுரைகள், பகிர்வுகளின் தொகுப்பாகும்.

தமிழகத்தைச்  சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான பா.செப்பிரகாசம், எழுத்தாளர்  ரவிக்குமார்  ஆகியோர்  தொகுத்துள்ள இந்நூலினை, மணற்கேணி பதிப்பகம்  வெளியிட்டுள்ளது.

ki-pi-kanavin-meethi-book (1)ki-pi-kanavin-meethi-book (2)ki-pi-kanavin-meethi-book (3)

நூல் அறிமுக அரங்கில் எழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், கவிஞர் சிவதாஸ் சிவபாலசிங்கம், எழுத்தாளர்  குணா கவியழகன் ஆகியோர் கருத்துரை ஆற்றவுள்ளனர்.

நூல் அறிமுக அரங்கினைத் தொடர்ந்து  இலங்கைத்தீவின் சமகாலஅரசியல் நிலைமைகள் தொடர்பான விவாதக்களம் இடம்பெறவுள்ளது.

“நாடாளுமன்றத் தேர்தலின் பின் தமிழர் அரசியல்: உரிமைகளை வென்றிடுமா? அல்லது சரணாகதி அடைந்திடுமா?”எனும் அரசியல் விவாதக்கள நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து அரசியல் ஆய்வாளர்கள் நிலாந்தன் மற்றும் யதீந்திராஆகியோர்  ஸ்கைப் தொழில்நுட்பம் வழியாகப் பங்கேற்கின்றனர்.

நோர்வேயைச் சேர்ந்த கருத்தாளர்களும் இதில் பங்கேற்வதாக “நோர்வே தமிழ் 3 வானொலி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *