மேலும்

Archives

ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலையீட்டைக் கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையிட்டு  அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்தும் போராட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியத் துணைத் தூதுவருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த வாள்

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் நடராஜனுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

ஐ.நா தூதுவர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் வருத்தம்

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் திடீர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஐதேக அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் – சட்டம், ஒழுங்கு ரணிலிடம்

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆறு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றனர்.

கச்சதீவில் சிங்களத்தில் ஆராதனை – இந்திய, இலங்கை பக்தர்கள் அதிர்ச்சி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிங்களத்தில் ஆராதனை நடத்தப்பட்டமை குறித்து- விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருகோணமலையில் பிரித்தானியர் கால பீரங்கிகள் மீட்பு

திருகோணமலையில் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மேலும் இரண்டு பாரிய பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி வருமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு

அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் (International Solar Alliance) உருவாக்கக் கூட்டம் மற்றும் சூரிய மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாலைதீவும் சிறிலங்காவும்

மாலைதீவு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்கம் சிறிலங்காவில் ஆட்சியைக் கைப்பற்றும் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எச்சரிக்கைக்கு உள்ளாக்குகிறது.

அதிகாரத்துக்குப் போட்டியிடும் சிங்களக் கட்சிகளும் பிரச்சினைகளோடு போராடும் சிறுபான்மையினரும்

இவ்வாண்டு தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இனப்பிரப்பிரச்சினை நிலவுகின்ற சிறிலங்காவில், வன்முறைகள் நிறைந்த தேர்தல்கள் இடம்பெறும். பெப்ரவரி 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சிறிலங்காவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

தியத்தலாவவில் பேருந்தில் குண்டுவெடிப்பு – 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பேர் காயம்

தியத்தலாவவில் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பயணிகள் காயமடைந்தனர்.