மேலும்

நாள்: 27th March 2026

சிறிலங்கா அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக குற்றப்பத்திரம் கையளிப்பு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இன்று  குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகளை மீறிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா அபராதம்

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு உடன்பாட்டின் மூலம், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி,  அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக,  சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அவசரமாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்பி வைத்தது இந்தியா

எரிபொருள் விநியோக நெருடிக்கடியை தீர்க்கும் நோக்கில்,  38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்  அடங்கிய ஒரு கப்பல், இந்தியாவில் இருந்து நாளை கொழும்புக்கு வந்து சேரவுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு- எதிரிகளின் விடுதலையும் ரத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின்  விடுதலையை ரத்து செய்துள்ள   மேன்முறையீட்டு நீதிமன்றம்  புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷாவின், சிறிலங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க இணங்கியுள்ளார்.

சுரேஷ் சாலேயை நீதிமன்றில் முன்நிறுத்த உத்தரவு

குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக்காவலில் உள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை, ஏப்ரல் 22 ஆம் நாள்,  நீதிமன்றத்தில் முன்னிறுத்த, கொழும்பு கோட்டை நீதிவான்  உத்தரவிட்டுள்ளார்.