மேலும்

திருகோணமலையில் பிரித்தானியர் கால பீரங்கிகள் மீட்பு

British cannons discovered at Trincoதிருகோணமலையில் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மேலும் இரண்டு பாரிய பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவுக்கான புதிய விடுதியை அமைப்பதற்காக குழி தோண்டிய போது, பாரிய பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, மண்ணில் புதைந்து கிடந்த மேலும் இரண்டு பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பீரங்கிகள் அனைத்தும் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர்  சுமணதாச தெரிவித்தார்.

British cannons discovered at Trinco

இந்த மூன்று பீரங்கிகளும் திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பீரங்கிகள் மூன்றும், சிறிலங்காவில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட காலனித்துவ ஆட்சிக்கால பீரங்கிகளை விட வடிவத்தில் வேறுபட்டவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *