மேலும்

ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலையீட்டைக் கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்

jaffna-sign-campaign (1)சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையிட்டு  அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்தும் போராட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். பேருந்து நிலையம் முன்பாக நேற்று மாலை 4 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனைத்துலக பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழு இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சிறிலங்காவுக்கு அளிக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலஅவகாசத்தில் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.

jaffna-sign-campaign (1)jaffna-sign-campaign (2)jaffna-sign-campaign (3)jaffna-sign-campaign (4)

எனினும், பொறுப்புக்கூறலுக்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், எஞ்சிய ஒரு ஆண்டு காலத்தையும் வீணடிக்காமல், சிறிலங்கா தொடர்பாக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது சிறப்பு அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் கையெழுத்துக்கள் பெறப்பட்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *