மேலும்

நாள்: 19th March 2026

அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி செர்ஜியோ கோர் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர், இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

60 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தை மகிந்தவிடம் வழங்கியதாக கபில சந்திரசேன வாக்குமூலம்

எயர் பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சமாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா, அப்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜியோ கோர் இன்று சிறிலங்கா பயணம்

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், இன்று முதல் சிறிலங்கா மற்றும் மாலைதீவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா உள்நாட்டுப் போரில் இஸ்ரேலின் பங்கை விபரிக்கும் ஆவணங்கள்

சிறிலங்கா 1970இல், அரபு நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக, இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் துண்டித்தது. ஆயினும், கொடூரமான உள்நாட்டுப் போர் வெடித்த சுமார் ஓராண்டிற்குப் பிறகு, 1984இல் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு திறக்கப்பட்டது.

சிறிலங்காவுடன் கலந்துரையாடவில்லை- ரஷ்ய தூதரகம் மறுப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ரஷ்ய தூதுவர் எல். ஜகரியன் (L. Dzhagarya) அண்மையில் நடத்திய சந்திப்பின் போது நிதி மற்றும் தளபாடச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் 10 வீதம் வரை உயரும்?

சிறிலங்காவில் எரிபொருள்களின் விலைகள் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக் கூடும் என சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.