மேலும்

நாள்: 23rd March 2026

ஈரானியக் கப்பல்களுக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்திருந்தது – தூதுவர் விளக்கம்

சிறிலங்கா அரசாங்கம், மூன்று ஈரானியக் கப்பல்களான ஐஆர்ஐஎஸ் டேனா, ஐஆர்ஐஎஸ் புஷேர் மற்றும் ஐஆர்ஐஎஸ் லாவன் ஆகியவற்றை நல்லெண்ணப் பயணத்திற்காக, அதிகாரப்பூர்வமாக அழைத்திருந்தது என்று, சிறிலங்காவுக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலே கைதுக்கு எதிரான மனுவை 6 மாதங்களுக்குப் பின் விசாரிக்க முடிவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, 6 மாதங்களுக்குப் பின் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கொழும்பு பயணம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா (Masato Kanda)  இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்தியா, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரிக்க முடியாதது- சிவசங்கர் மேனன்

இந்திய- சிறிலங்கா உறவுகள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலருமான சிவ்சங்கர் மேனன், இந்தச் செவ்வியில் விபரித்துள்ளார்.