மேலும்

மைத்திரி ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டம் – பகீரதி மீது பாய்ந்தது

பிரான்சில் இருந்து வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, முருகேசு பகீரதி என்ற பெண்ணை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

17 பேர் கொண்ட குழுவுடன் நாளை பிரித்தானியா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது.

இன்று கொழும்பு வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இரண்டுநாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மீண்டும் தவறு இழைக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எச்சரித்துள்ளார்.

நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது

சீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள,  சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசாங்கம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீனாவின் செல்வாக்கை முறியடிக்க சிறிலங்காவுக்கு உதவிகளை அள்ளி வழங்கவுள்ளார் மோடி

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் சிறிலங்கா உள்ளிட்ட நான்கு தீவுகளுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெருமளவில் வழங்கவுள்ளார்.

சிக்கலில் சிக்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பட்டம்

ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான  ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்க்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையால், பீல்ட் மார்ஷலாக அவருக்குப் பதவிஉயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றக் கலைப்பு மே மாதம் வரை தாமதமாகலாம் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமடையலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார்.

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத்தை நிறுத்துமாறு சீனாவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தா விட்டால், சீன நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.