மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

திருத்தங்களை முன்மொழிய சிறிலங்காவுக்கு 24 மணி நேர காலஅவகாசம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மரண சான்றிதழ்களை ஏற்கத் தயங்குவதாக காணாமல் போனோருக்கான பணியகம் ஜெனிவாவில் ஒப்புக் கொண்டுள்ளது.

சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது  என்று சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென ஹோங் தெரிவித்துள்ளார்.

புதிய ஜெனிவா தீர்மான வரைவில் பல முக்கிய விடயங்கள் நீக்கம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா தொடர்பான இரண்டாவது தீர்மான வரைவில், சில முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில்  அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில்  நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

சர்வதேச நீதி கோரி சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்கா அதிபரை சந்திக்க நேரம் கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ட்ரம்பின் சிறப்புத் தூதுவருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவரும், வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் பணியகத்தின் பணிப்பாளருமான செர்ஜியோ கோரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலருடனும் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஜெனிவாவில் நாளை மறுநாள் மீளாய்வு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின், சிறிலங்கா குறித்த கால மீளாய்வு அமர்வு வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

மாகாணசபை தேர்தலுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்- சந்தோஷ் ஜாவிடம் கோரிக்கை

மாகாணசபைகளுக்கான தேர்தலை  உடனடியாக நடத்துவதற்கு  சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.