செம்மணியில் 63 எலும்புக்கூடுகள் – இன்றுடன் அகழ்வு இடைநிறுத்தம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில், இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுப்பணி நேற்று 14 ஆவது நாளாக இடம்பெற்றது.
இரண்டு கட்டங்களாக இதுவரை 23 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில், 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வின் போது, ஒரு சிறுமியின், ஆடைகள் , இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வு இன்றுடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளது.
விரைவில் அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என கூறப்படுகின்ற போதும், அதற்கான திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.