செம்மணியில் தோண்டும் இடம் எங்கும் மனித எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 52 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று 12ஆவது நாளாக இடம்பெற்ற இரண்டாம் கட்ட மனிதப் புதைகுழி அகழ்வின் முடிவில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 47 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவற்றில் குவியலாக குழப்பமான முறையில் கிடந்த 4 எலும்புக்கூட்டு எச்சங்களும் அதில் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நீர் வழிந்தோட கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழியில் மூன்று இடங்களில் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தென்படுவதால் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா ரெிவித்துள்ளார்.