நீதிமன்றில் நிறுத்தப்பட்ட பிள்ளையான்- விளக்கமறியல் நீடிப்பு
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
