கோத்தாவிடம் 2 பில்லியன் ரூபா மானநட்டம் கோருகிறார் ரவி கருணாநாயக்க
தனக்கெதிராக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட ‘பொய்யான குற்றச்சாட்டு’ தொடர்பில் நட்டஈடாக இரண்டு பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
