மேலும்

சிறிலங்காவின் கடன் விதிமுறைகளை மீளாய்வு செய்ய முடியாது – சீனா உறுதி

Srilanka-chinaசிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்பாடுகளின் விதிமுறைகளை மீளாய்வு செய்யத் தயாராக இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு கடன்களை வழங்கியுள்ள இரண்டு முக்கிய சீன நிறுவனங்களில் ஒன்றான சீன அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளினதும் சட்டங்கள், மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கிய பின்னரே, தமது நிறுவனம், சிறிலங்காவுக்கு கடன் வழங்க இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசாங்கம் அமைச்சரவையிடம் இருந்து அங்கீகாரம் பெற்றதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியையும் பெற்றிருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவின் முன்னைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களையே தாம் இந்தக் கடன்களுக்கான சட்டப் பிரதிநிதியாக எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேவைப்பட்டால், இது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்துடன்  பேசத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

உலகின் மற்றைய நிதி நிறுவனங்களை விட சீனாவின் வட்டி வீதங்கள் அதிகமாக இருப்பதான குற்றச்சாட்டுக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமது வணிக வட்டிவீதம் 5.9 வீதமே என்றும், எனினும், சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட அரச பிணை முறிகளின் வட்டி வீதம் 6 தொடக்கம் 7 வீதமாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

“எமது கருத்துகள் உண்மை மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

உங்களுக்கு தரவுகள் தேவையென்றால், ஏனைய நிதி நிறுவனங்களின் வட்டி வீதங்களை ஒப்பிட்டு நோக்குவதற்காக எமது உடன்பாட்டு விபரங்களை வெளியிடுவோம்.

சில நாடுகள் தேய்மானத்தைப் பயன்படுத்திக் கொள்ள உள்ளூர் நாணய  கடன்களை வழங்கும்.

உள்ளூர் நாணயம் உறுதியான நிலையில் இருக்கும் நாடுகளுக்கு அது நல்லது. இது கடன் வாங்கும் நாட்டுக்கு இன்னொரு சுமையாகும். நாம் அதுபோலச் செய்தில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *