செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கப் பிரமுகர்கள், மற்றும் மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரும் பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.







