செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி கத்தோலிக்க குருமார் பேரணி
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி, யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினரால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரியாலை புனித யுதாதேய சுருவம் முன்பாக, இன்று காலை 10 மணிக்கு ஒன்று கூடிய மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க குருமாரும், அருட்சகோதரிகளும், செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அதன் பின்னர், செம்மணி வீதியில் அணிவகுத்து நின்று தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பேரணியில் பங்கேற்றவர்கள், செம்மணிக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், மௌனம் அல்ல நீதியே தேவை, உண்மைகள் மறைக்கப்படக் கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.







படங்கள்- யாழ்தீபன் (முகநூல்)