மேலும்

மாதம்: May 2025

நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம்  எதிர்ப்பது அதற்கு கிடைத்த கௌரவம்

கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டதை, ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்துள்ள கௌரவம் என்று, பிராம்ப்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையிடம் அணுசக்தி பொருட்களை கண்டறியும் அதிநவீன கருவி

ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவித் தொகுதியை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.

சர்வதேச இராஜதந்திரிகளுடன் தமிழ் தேசிய பேரவை அவசர சந்திப்பு

வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த, சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக் கோரி , தமிழ் தேசிய பேரவையினருக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும்  இடையில், கொழும்பில் இன்று சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

சபைகளில் ஆட்சியமைக்க முனையும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறார் அனுர

தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை மீறி, உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளூராட்சி சபையின் ஆட்சியும், மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் நின்று பிடிக்க முடியாது என, சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.

கனடிய தூதுவரை அழைத்துக் கண்டித்ததை வரவேற்கிறார் நாமல்

தமிழினப் படுகொலை நினைவுச் சின்னத்தைத் திறப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, கனடிய தூதுவர் எரிக் வோல்ஷ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதற்கு, சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

கனடிய தூதுவரை அழைத்து சிறிலங்கா அமைச்சர் கண்டனம்

கனடாவின் பிராம்ப்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம், அமைக்கப்பட்டதற்கு, கொழும்பில் உள்ள கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொடையை ஏற்பதா என்று சிறிலங்காவே தீர்மானிக்குமாம்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்துள்ள 62 மில்லியன் டொலர் கொடையை ஏற்றுக்கொள்வது குறித்து சிறிலங்காவே தீர்மானிக்கும் என்று, சிறிலங்காவின் துறைமுகங்கள்,  சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான விசாரணை – தட்டிக்கழிக்கும் ஆணைக்குழு, காவல்துறை

தேர்தல் பரப்புரைக் காலத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறையை மீறியது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவும், சிறிலங்கா காவல்துறையும் தட்டிக்கழித்துள்ளன.

கனடா தமிழினப் படுகொலை நினைவகம் – கொந்தளிக்கிறார் நாமல்

கனடாவில் தமிழினப் படுகொலை நினைவகம், திறக்கப்பட்டிருப்பது குறித்து தனது சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இதுதொடர்பாக சிறிலங்கா அரசு உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தாயகம் எங்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, இன அழிப்பை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.