இந்தியாவின் கொடையை ஏற்பதா என்று சிறிலங்காவே தீர்மானிக்குமாம்
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்துள்ள 62 மில்லியன் டொலர் கொடையை ஏற்றுக்கொள்வது குறித்து சிறிலங்காவே தீர்மானிக்கும் என்று, சிறிலங்காவின் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
‘காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு இந்தியா மானியத்தை வழங்க முன்வந்துள்ளது.
இதற்கமைய, சிறிலங்கா துறைமுக அதிகாரசபை, தற்போது காங்கேசன்துறை துறைமுகம் குறித்த சாத்திய ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
நாங்கள் ஒரு வணிகத் திட்டத்தை வகுப்போம். அதன் பின்னரே, இந்தியாவின் கொடையை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.
சாத்திய ஆய்வைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
