சிறிலங்கா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா, பிரித்தானியா பயண ஆலோசனை
சிறிலங்காவில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அமெரிக்காவும் பிரித்தானியாவும், தமது நாட்டவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்கும் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவில் பயணிகள் எதிர்கொள்ளும் சுகாதார ஆபத்து பட்டியலில் சிக்குன்குனியாவை பிரித்தானிய வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் பணியகம் சேர்த்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதிக்குச் செல்லத் திட்டமிடும் மக்கள் சிக்குன்குனியாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.
சிக்குன்குனியா பரவல் உள்ள பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி போடவும், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதை மறுபரிசீலனை செய்யவும் என்றும், அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.