மேலும்

மாதம்: July 2019

கோத்தா இல்லையேல் தினேஸ் – மொட்டு கட்சி திட்டம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்படக் கூடியவர்களில் தினேஸ் குணவர்த்தனவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதித்துறை அதிகாரிகள் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்புக்கு தடை

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் உடன், தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

நாடு திரும்பினார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்றிரவு 11.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பினார். 

46 நாடுகளின் பயணிகளுக்கு சிறிலங்காவில் இலவச வருகை நுழைவிசைவு

இந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வருகை நுழைவிசைவு வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஓகஸ்ட் 1ஆம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

கொழும்புடன் இணைந்தது துறைமுக நகர நிலப்பரப்பு

கடலுக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நிலப்பரப்பை, கொழும்பு பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கான, தீர்மானம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மகிந்தவுடனான சந்திப்பு – அமெரிக்க தூதுவர் மௌனம்

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கோத்தாவை அறிவிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை அறிவிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐதேக வேட்பாளருக்கு ஆதரவாக திரும்பும் ராஜபக்ச அனுதாபிகள்

வரும் அதிபர் தேர்தலை இலக்கு வைத்து, பரந்துபட்ட தேசிய கூட்டணியை ஐதேக அறிவித்த பின்னர், மகிந்த ராஜபக்சவின் அணியில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள் பலர் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருண தெரிவித்தார்.

பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு சிறிலங்கா அதிபர் பதிலடி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

டிசெம்பர் 7இற்கு முன் அதிபர் தேர்தல்

சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நொவம்பர் 15ஆம் நாளுக்கும், டிசெம்பர் 7ஆம் நாளுக்கும் இடையில் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.