கொழும்புடன் இணைந்தது துறைமுக நகர நிலப்பரப்பு
கடலுக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நிலப்பரப்பை, கொழும்பு பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கான, தீர்மானம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் வஜிர அபேவர்த்தன இந்தப் பிரேரணையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய, கொழும்பு துறைமுக நகரை அமைப்பதற்காக, கடலுக்குள் உருவாக்கப்பட்ட 446.61 ஏக்கர் நிலப்பரப்பு, கொழும்பு நிர்வாக மாவட்டத்தில், கொழும்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது.