மேலும்

நாள்: 4th July 2019

அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.

ஹேமசிறி, பூஜிதவை ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் உள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மரணதண்டனை நிறைவேற்றும் நாள் அறிவிக்கப்படவில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு தொடர்பாக, அதிபர் செயலகமோ, நீதி அமைச்சோ இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என்று, மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

சிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.

மாணவர்கள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட 13 அதிரடிப்படையினரும் விடுதலை

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 13 பேரும், குற்றங்களை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.