மேலும்

நாள்: 20th July 2019

வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதியை சிறிலங்கா பிரதமர் காப்பாற்றத் தவறியுள்ள நிலையில், கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி

தமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை  – நிபுணர் குழு

தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே, மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றும், கடலுக்கு அடியிலான இணைப்புகளின் மூலம் அதற்குச் சாத்தியம் இல்லை எனவும், தமிழ்நாட்டின் மின்சக்தி அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து

சிறிலங்கா கடற்படையின் அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான எஸ்எல்என்எஸ் கஜபாகுவுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க தனிநபர் பிரேரணை

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை ஒழிப்பதற்கான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் முதலிட பிரான்ஸ் ஆர்வம்

அம்பாந்தோட்டை துறைமுகத்திலும், தோட்டத் தொழில்துறையிலும் முதலீடுகளைச் செய்வதற்கு பிரெஞ்சு முதலீட்டாளர்கள் அக்கறை கொண்டுள்ளதாக, சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் எரிக் லவேர்டு தெரிவித்துள்ளார்.